தமிழனின் சிந்தனை-3
சொன்னது
தமிழன்
Labels:
தமிழனின் சிந்தனை
0
comments
அரை குறை படித்தவர்கள் எவ்வளவு தான் துதிபாடி உயர்ந்த
பதவிக்கு சென்றாலும் என்றாவது ஒரு நாள் உண்மை வெளியே
தெரியும் அப்போது பிறரால் ஒதுக்கப்படுவார்கள்.
தமிழனின் சிந்தனை-2
சொன்னது
தமிழன்
Labels:
தமிழனின் சிந்தனை
0
comments
உதவி செய்யும் குணத்தை நம் குழந்தைகளுக்கு
கற்று கொடுக்க வேண்டும். தற்பெருமை பேசுவதை
எக்காலத்திலும் செய்யக்க்கூடாது என்ற எண்ணத்தையும்
இளமையிலே வளர்க்க வேண்டும்.
தமிழனின் சிந்தனை-1
சொன்னது
தமிழன்
Labels:
தமிழனின் சிந்தனை
0
comments
வாழ்க்கையில் உழைப்புக்கேற்ற பணம் சம்பாதிக்க முடியவில்ல்லை
என்ற எண்ண வேண்டாம். நோயில்லாத வாழ்க்கையை இறைவன்
நமக்கு கொடுத்ததை விட பணம் பெரிதல்ல.
மொபைல் கேமரா மூலம் அழகாய் படம் எடுக்க குறிப்புகள்
சொன்னது
தமிழன்
Labels:
மொபைல்
0
comments
முதன்முறை டெக்னிகல் இடுகை. ரொம்ப பேசாம நேரா விடயத்திற்கு செல்வோம். நம்மில் பலர் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தாலும், தன்னிடம் சொந்தமாக ஒரு டிஜிட்டல் கேமரா இருக்காது. எனினும், முயன்ற அளவு திருப்திகரமான புகைப்படங்களை நம் அலைபேசியில் உள்ள கேமரா மூலம் சுட முடியும். அதற்கான சில சின்ன சின்ன வழிமுறைகள்.வெளிச்சம் தேவை:
பல அலைபேசிகளில் உள்ள கேமராக்களில் ஃப்ளாஷ் இல்லாத்தால் புகைப்படங்கள் இருளான சூழலில் சுடுவது கடினம் தான். அலைபேசிகளில் உள்ள கேமரா பொருத்தமட்டில் வெளிச்சம் ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. படம் எடுக்கும் போது நீங்கக் எடுக்க போகும் பொருள் (subject) குறைந்தபட்சம் வெளிச்சம் தெளிவாக இருக்க வேண்டும். பளீச் என மின்ன வேண்டாம். அதே சமயம் இருளாகவும் இருந்து விடக் கூடாது. நம் கண்கள் போல் அல்ல கேமராக்கள். ஆக, நமக்கு தெரியும் ஒளி கேமராவிற்கு தெரியாது. பல வெளிச்சங்களில் புகைப்படம் எடுத்துப் பாருங்கள். பிறகு ஒளி அளவின் தேவைப் பற்றி அறிய முடியும். விளக்குகளும் பயன்படுத்துங்கள். சரியான அளவினான ஒளியுடன் கூடிய விளக்குகள் subject மீது ஒளிக்கச் செய்து படங்கள் எடுக்கலாம். subject-இன் பின்புறம் உள்ள வெளிச்சம் subject மீது உள்ள வெளிச்சத்தை விட குறைவாக இருக்க வேண்டும். இதில் அதிக கவனம் தேவை.
அசையாத நிலை அவசியம்:
ஒவ்வொரு கேமராவிற்கும் உள்ள பண்பு நலன்களில் shutter speed முக்கியமானது. ஷட்டர் ஸ்பீட் என்பது, கேமரா ஒளியினை தன் உள்ளே ஊடுறுவ அனுமத்திக்கும் காலம் என்பதனை குறிக்கும். ஒரு தரமான கேமரா என்றால் குறைந்த பட்சம் 1/200 வினாடி கால அவகாசம் மட்டுமே ஒளி உள்ளே செல்ல அனுமத்திக்கும். இதனால், அசையும் பொருளினை படம் எடுத்தாலும், அது நிற்பது போலவே காட்சி அளிக்கும். அலைபேசியில் உள்ள கேமராக்களில் ஷட்டர் ஸ்பீட் அதிகமாகவே இருக்கும். வெளிச்சம் குறைவான சூழலில் இது இன்னும் அதிகமாக் இருக்கும். எனவே, முடிந்த வரை நீங்கள் எடுக்க போகும் subject எந்த காரனத்தாலும் அசையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கையில் பிடித்து படம் எடுக்கும் போது சில சமயம் கை நடுங்கும். நடுங்காவிட்டாலும், 'க்ளிக்' செய்யும் போது கண்டிப்பாக அசையும். அதனால், அனைத்து கேமராக்களிலும் டைமர் (timer) எனும் வசதி தரப்பட்டிருக்கும். அதில் 5 வினாடி (உதாரனமாக்) அமைத்துவிட்டு, 'க்ளிக்' செய்துவிட்டு நிலையான இடத்தில் சப்ஜக்ட் நோக்கி வைத்து விடுங்கள். 10 வினாடிகளில் தானாக 'க்ளிக்' செய்துக்கொள்ளும். subject-ம் கேமராவும் அசையாத பட்சத்தில், தெளிவான படம் கிடைப்பது உறுதி.
Zoom வேண்டவே வேண்டாம்:
subject உங்கள் படத்தில் எவ்வளவு அருகில் வேண்டுமோ அவ்வளவு அருகில் சென்று படம் எடுங்கள். Zoom என்பது தூரத்தில் உள்ள நமது subject அருகில் சென்று எடுப்பது போன்ற உணர்வினைத் தரவே பயன்பட்டாலும், அதில் இரண்டு வகை உள்ளது. ஒன்று- ஆப்டிக்கல் ஜூம்: இது, ஒரு ஜோடி லென்ஸ் தனக்குள் இருக்கும் தூரத்தை அதிகப்படுத்தி, தொலைவில் உள்ள பொருளினை அருகில் இருப்பது போல் காட்டும். இதனால், படம் எடுக்கும் போது zoom செய்யப்பட்ட ஒளி மட்டுமே கேமரா உள்ளே செல்கிறது. இரண்டாம் வகை: டிஜிட்டல் ஜூம்: இது, தொலைவில் இருக்கும் பொருளை தொலைவிலேயே படம் எடுத்து, அதை pixel enlargement செய்யும். அதாவது, ஒரு பிக்ஸலில் உள்ள விவரம் (definition) ஒன்றிற்க்கு மேற்பட்ட பிக்ஸல் தேவைப்படும் விதம் பெரிதாக்கி கொள்ளும். இதனால், படத்தின் துள்ளியம் குறைகிறது. அலைபேசிகளில், டிஜிட்டல் ஜூம் எனப்படும் அம்சம் மட்டுமே காணப் படுகிறது( சமீபத்தில் ஸ்பைஸ் மொபைல் ஆப்டிகல் ஜூம் வசதியுடன் அலைப் பேசியினை அறிமுகப்படுத்தி உள்ளது). எனவே, டிஜிட்டல் ஜூம் வசதியினை முடிந்த வரை தவிர்த்து பொருளின் அருகில் சென்று படம் எடுங்கள். "என்னய்யா..? அப்புறம் எதுக்கு இந்த டிஜிட்டல் ஜூம்னு ஒன்னு இருக்கு' என்றால், அதன் அவசியம் தவிர்க்க முடியாத சில சமயங்களில் தேவையே படுகிறது. உதாரணத்திற்கு, தொலைவில் உள்ள பொருளினை படம் எடுக்கப் போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அந்த பொருள் எதிர் வீட்டில் உள்ள உங்கள் காதலி என் வைத்துகொள்வோம்(சும்மா வைத்துகொள்வோம்). அவள் அவளது அறையில் இருக்கிறாள், நீங்கள் உங்கள் ஜன்னலில் இருந்து படம் எடுக்கிறீர்கள். இருவர் வீட்டிற்கும் இடையில் உள்ள திறந்த வெளியினால், ஆதவன் உங்கள் காதலியின் பிரகாசத்தை குறைத்துவிடுவான். அப்போது, இந்த ஜூம் வேறு வழி இல்லாமல் பயன்படுத்தியே தீர வேண்டும். ஜன்னல் வரை ஜூம் செயவதால், இடையில் உள்ள வெளிச்சம் காணாமல் போகும், இதனால் கேமரா தானாகவே வெளிச்சம் அதிகப்படுத்தி, காதிலையை அவர் இருப்பது போல் பிரகாசமாகவே காட்டும்( ஐடியா தவறான வழியில் பயன்படுத்தப்பட்டால் கம்பெனி பொறுப்பல்ல!). தவிர்க்க முடியாத சூழல் தவிர முடிந்த வரை ஜூம் வசதி வேண்டவே வேண்டாம்.
Automatic தவிர்த்துவிடுங்கள்:
டிஜிட்டல் கேமராக்களில்ஆட்டோ எனும் வசதி தரப்பட்டிருக்கும். இது, "white balance" எனும் வசதியின் கீழ் இருக்கும். white balance என்பது நீங்கள் படம் எடுக்கப் போகும் பொருளினை, நிறம் மாற்றாம் இல்லாமல் எடுக்கவே. இதை auto modeல் வைத்து விட்டு அதன் பயனே தெரியாமல் படம் எடுக்காதீர்கள். நீங்கள் இருக்கும் சூழல், விளக்கின் நிறம் பொருத்து பொருளின் நிறம் மாறி தோன்றும். இதனால், நீங்கள் white balance பயன்படுத்தி உண்மையான நிறம் அல்லது, வேண்டிய நிறத்தில் படம் எடுக்கலாம். இருளில் கூட அதாவது தேவையற்ற புள்ளிகள் (grains) ஏதும் கூட இல்லாமல் படம் எடுக்க முடியும். அதுவும் இல்லாமல், mood-ற்கு தகுந்தவாறும் நிறம், தோற்றம் மாற்றி அமைக்கலாம். இதில் பல ஆய்விகளை நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். மிகவும் பயனுள்ளதாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.
அதிகபட்ச resolution:
உங்கள் கேமராவில் உள்ள அதிகபட்ச ரெசொல்யூஷன் செட் செய்யுங்கள். பிறகாலத்தில் எடிட் செய்வதற்கு உதவியாக இருக்கும். படத்தின் விவரமும்(definition) அதிகமாகவும், துள்ளியமாகவும் இருப்பதால், படத்தில் மாற்றங்கள் செய்யும் போது ஏற்படும் விவர நட்டம் (reduced definition) குறைவாகவும், வேண்டாத பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாமலும் இருக்கும். ஒரு 2 megapixel கேமராவின் அதிகபட்ச resolution 1600 பிக்ஸல் அகலமும், 1200 பிக்ஸல் உயரமும் இருக்கும். இதனை, 1600x1200(அகலம்xஉயரம்) என்ற முறையின் கீழ் குறிக்கப்படும்.
ஒரே பொருள், பல முறை:
ஒரு பொருளை படம் எடுக்கும் போது, ஒரு முறை எடுத்து, அது திருப்திகரமாய் இருந்தாலும் மேலும் பல முறை சுட்டுக் கொள்ளுங்கள். அலைபேசியில் உள்ள திரையில் தோன்றும் பிரகாசம், கனிணி திரையில் தெரியாது. எனவே, அலைபேசியின் திரையினைப் பார்த்து ஏமார்ந்து விடாதீர்கள். பல படங்கள் எடுப்பதன் மூலம், கனிணியில் அனைத்தையும் பார்த்து, அவற்றில் இருந்து ஒன்று தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும். ஃபில்ம் ரோல் தேவை இல்லாததால், தேவையற்ற படங்களை பின்னர் அழித்து விட்டு, நினைவினை மீள பெற முடியும். எனவே, சிக்கனம் பார்க்காமல் சுட்டுத் தள்ளுங்கள்.
மற்றும், கேமரா லென்ஸினை அவ்வபோது சுத்தம் செய்துக்கொள்ளுங்கள். மூக்குகண்ணாடி துடைக்கப் பயன்படும் துனி, காது குடையும் காட்டன் பட்(cotton bud) ஆகியவை கேமராவினை துடைக்க சிறந்த பொருட்கள்.
பின்குறிப்பு:
நெனச்ச நேரத்துல, அப்பப்ப பார்க்கும் அறிய விஷயங்கள ஃபோட்டோ எடுக்றதுக்கு தான் ஃபோன்ல கேமரா இருக்கு. இவ்வளவும் பண்ணிக்கிட்டிருந்தா எப்புடினு நெனக்கரவங்களுக்கு,
அசப்பில் சில அழகான தருனங்கள் வரும் போது, 'எனக்கும் அதே ஃபீலிங் தான்'.
பல அலைபேசிகளில் உள்ள கேமராக்களில் ஃப்ளாஷ் இல்லாத்தால் புகைப்படங்கள் இருளான சூழலில் சுடுவது கடினம் தான். அலைபேசிகளில் உள்ள கேமரா பொருத்தமட்டில் வெளிச்சம் ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. படம் எடுக்கும் போது நீங்கக் எடுக்க போகும் பொருள் (subject) குறைந்தபட்சம் வெளிச்சம் தெளிவாக இருக்க வேண்டும். பளீச் என மின்ன வேண்டாம். அதே சமயம் இருளாகவும் இருந்து விடக் கூடாது. நம் கண்கள் போல் அல்ல கேமராக்கள். ஆக, நமக்கு தெரியும் ஒளி கேமராவிற்கு தெரியாது. பல வெளிச்சங்களில் புகைப்படம் எடுத்துப் பாருங்கள். பிறகு ஒளி அளவின் தேவைப் பற்றி அறிய முடியும். விளக்குகளும் பயன்படுத்துங்கள். சரியான அளவினான ஒளியுடன் கூடிய விளக்குகள் subject மீது ஒளிக்கச் செய்து படங்கள் எடுக்கலாம். subject-இன் பின்புறம் உள்ள வெளிச்சம் subject மீது உள்ள வெளிச்சத்தை விட குறைவாக இருக்க வேண்டும். இதில் அதிக கவனம் தேவை.
அசையாத நிலை அவசியம்:
ஒவ்வொரு கேமராவிற்கும் உள்ள பண்பு நலன்களில் shutter speed முக்கியமானது. ஷட்டர் ஸ்பீட் என்பது, கேமரா ஒளியினை தன் உள்ளே ஊடுறுவ அனுமத்திக்கும் காலம் என்பதனை குறிக்கும். ஒரு தரமான கேமரா என்றால் குறைந்த பட்சம் 1/200 வினாடி கால அவகாசம் மட்டுமே ஒளி உள்ளே செல்ல அனுமத்திக்கும். இதனால், அசையும் பொருளினை படம் எடுத்தாலும், அது நிற்பது போலவே காட்சி அளிக்கும். அலைபேசியில் உள்ள கேமராக்களில் ஷட்டர் ஸ்பீட் அதிகமாகவே இருக்கும். வெளிச்சம் குறைவான சூழலில் இது இன்னும் அதிகமாக் இருக்கும். எனவே, முடிந்த வரை நீங்கள் எடுக்க போகும் subject எந்த காரனத்தாலும் அசையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். கையில் பிடித்து படம் எடுக்கும் போது சில சமயம் கை நடுங்கும். நடுங்காவிட்டாலும், 'க்ளிக்' செய்யும் போது கண்டிப்பாக அசையும். அதனால், அனைத்து கேமராக்களிலும் டைமர் (timer) எனும் வசதி தரப்பட்டிருக்கும். அதில் 5 வினாடி (உதாரனமாக்) அமைத்துவிட்டு, 'க்ளிக்' செய்துவிட்டு நிலையான இடத்தில் சப்ஜக்ட் நோக்கி வைத்து விடுங்கள். 10 வினாடிகளில் தானாக 'க்ளிக்' செய்துக்கொள்ளும். subject-ம் கேமராவும் அசையாத பட்சத்தில், தெளிவான படம் கிடைப்பது உறுதி.
Zoom வேண்டவே வேண்டாம்:
Automatic தவிர்த்துவிடுங்கள்:
டிஜிட்டல் கேமராக்களில்ஆட்டோ எனும் வசதி தரப்பட்டிருக்கும். இது, "white balance" எனும் வசதியின் கீழ் இருக்கும். white balance என்பது நீங்கள் படம் எடுக்கப் போகும் பொருளினை, நிறம் மாற்றாம் இல்லாமல் எடுக்கவே. இதை auto modeல் வைத்து விட்டு அதன் பயனே தெரியாமல் படம் எடுக்காதீர்கள். நீங்கள் இருக்கும் சூழல், விளக்கின் நிறம் பொருத்து பொருளின் நிறம் மாறி தோன்றும். இதனால், நீங்கள் white balance பயன்படுத்தி உண்மையான நிறம் அல்லது, வேண்டிய நிறத்தில் படம் எடுக்கலாம். இருளில் கூட அதாவது தேவையற்ற புள்ளிகள் (grains) ஏதும் கூட இல்லாமல் படம் எடுக்க முடியும். அதுவும் இல்லாமல், mood-ற்கு தகுந்தவாறும் நிறம், தோற்றம் மாற்றி அமைக்கலாம். இதில் பல ஆய்விகளை நீங்களே நடத்திக் கொள்ளுங்கள். மிகவும் பயனுள்ளதாகவும், சுவாரசியமாகவும் இருக்கும்.
அதிகபட்ச resolution:
உங்கள் கேமராவில் உள்ள அதிகபட்ச ரெசொல்யூஷன் செட் செய்யுங்கள். பிறகாலத்தில் எடிட் செய்வதற்கு உதவியாக இருக்கும். படத்தின் விவரமும்(definition) அதிகமாகவும், துள்ளியமாகவும் இருப்பதால், படத்தில் மாற்றங்கள் செய்யும் போது ஏற்படும் விவர நட்டம் (reduced definition) குறைவாகவும், வேண்டாத பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படாமலும் இருக்கும். ஒரு 2 megapixel கேமராவின் அதிகபட்ச resolution 1600 பிக்ஸல் அகலமும், 1200 பிக்ஸல் உயரமும் இருக்கும். இதனை, 1600x1200(அகலம்xஉயரம்) என்ற முறையின் கீழ் குறிக்கப்படும்.
ஒரே பொருள், பல முறை:
ஒரு பொருளை படம் எடுக்கும் போது, ஒரு முறை எடுத்து, அது திருப்திகரமாய் இருந்தாலும் மேலும் பல முறை சுட்டுக் கொள்ளுங்கள். அலைபேசியில் உள்ள திரையில் தோன்றும் பிரகாசம், கனிணி திரையில் தெரியாது. எனவே, அலைபேசியின் திரையினைப் பார்த்து ஏமார்ந்து விடாதீர்கள். பல படங்கள் எடுப்பதன் மூலம், கனிணியில் அனைத்தையும் பார்த்து, அவற்றில் இருந்து ஒன்று தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும். ஃபில்ம் ரோல் தேவை இல்லாததால், தேவையற்ற படங்களை பின்னர் அழித்து விட்டு, நினைவினை மீள பெற முடியும். எனவே, சிக்கனம் பார்க்காமல் சுட்டுத் தள்ளுங்கள்.
மற்றும், கேமரா லென்ஸினை அவ்வபோது சுத்தம் செய்துக்கொள்ளுங்கள். மூக்குகண்ணாடி துடைக்கப் பயன்படும் துனி, காது குடையும் காட்டன் பட்(cotton bud) ஆகியவை கேமராவினை துடைக்க சிறந்த பொருட்கள்.
பின்குறிப்பு:
நெனச்ச நேரத்துல, அப்பப்ப பார்க்கும் அறிய விஷயங்கள ஃபோட்டோ எடுக்றதுக்கு தான் ஃபோன்ல கேமரா இருக்கு. இவ்வளவும் பண்ணிக்கிட்டிருந்தா எப்புடினு நெனக்கரவங்களுக்கு,
அசப்பில் சில அழகான தருனங்கள் வரும் போது, 'எனக்கும் அதே ஃபீலிங் தான்'.
சிறந்த பத்து சிண்ணங்களின் இரகசியங்கள்
சொன்னது
தமிழன்
Labels:
சுவாரசியம்
0
comments
First Impression is the Best Impression
நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமும், நுகர்வோரிடமும் முதல் அபிப்பிராயம் ஆழ்ந்ததாகவும், வலிமையாக இருக்க உதவுகிறது அவைகளில் சின்னங்கள். பெயர் வைப்பதில் எவ்வளவு கவனம் வேண்டடுமோ அதே கவனம் சின்னத்திலும் செலுத்துதல் அவசியம். சிலர், பெயரினும் அதிக கவனம் சின்னத்தை அலங்கரிப்பதிலே இட்டு, அதன் மூலம் மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றனர். அவைகளில் சிறந்த (என்னைப் பொருத்த வரையில்) பத்து சின்னங்களை தேடி பிடித்து பதிவில் இடுகிறேன்.
பத்தாவது இடம்:

இந்த சின்னத்தில் எழுத்துக்கள் அனைத்துமே தன்னை நிறுவனத்தின் பெயரான 8 எனும் "எண்"ணை குறிக்கின்றன. மிக துல்லியமாகவும் தெளிவாகவும் செய்த நேர்த்தி.
ஒண்பதாவது இடம்:

அமேசான் இணைய தளம் நமக்கு நன்கு தெரிந்த தளம் தான். இந்த சின்னத்தில் என்ன அப்படி இருக்கிறது? வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சி தான் முக்கியம் என்பது போல பெயருக்கு கீழே ஒரு சிரிக்கும் குறி இருக்கிறது, அவ்வளவு தானே என்கிறீர்களா? நிதானித்துப் பாருங்கள், எங்களிடம் A to Z எல்லாப் பொருட்களும் கிடைக்கும் என சொல்வதை உணர்வீர்கள்.
எட்டாவது இடம்:

டாஸ்டிடாஸ் எனும் நொறுக்குத் தீனீ நிறுவனம், இரண்டு பேர் கொண்டாடிய வன்னம் உன்பதாகக் காட்டுவது போல தனது சின்னத்தை வடிவமைத்துள்ளனர். இனிமே கடலை போடாமல், சிப்ஸ் போடுங்கப்பா!
ஏழாவது இடம்:

ஃபெடெக்ஸ் நிறுவனம், நாங்கள் நில்லாமல் முன்னோக்கி சென்றுக் கொண்டே இருப்போம் என்பதை, E மற்றும் X இடையில் உள்ள வற்றிடத்தை அம்புக்குறியோடு உணர்த்துகின்றனராம். எளிமையான ஆனால் ஆழமானக் கருத்துடைய சின்னங்களில் ஒன்று.
ஆறாவது இடம்:

எலிஃபான்ட் நிறுவனம் தனது சின்னத்தில் என்ன சிறப்பாக கொண்டுள்ளது? முதல் எழுத்தான "e" என்ற எழுத்தை சின்னமாக இருக்கிறது என்போர் கவனிக்க, கருமை நிற பொட்டில், யானையின் துதிக்கை உள்ளதை!
ஐந்தாவது இடம்:

பிக்டெண் தன்னுள் மொத்தம் 11 அணிகளைக் கொண்டது. ஆதனால், பெயரைக் கண்டு குழம்பிவிடக் கூடாதென்றெண்ணி, "T" இரு பக்கத்திலும், 11 என்று தோன்றுமாறு வடிவமைத்து விட்டனர். அது சரி, பிக்டெண் என்று பெயர் வைக்க வேண்டுமா? "பிக்இலெவண்" என்று வைத்திருக்கலாமே?
நான்காவது இடம்:

கணினி உபயோகிக்கும் அனைவருக்கும் தெரியும், சன் நிறுவனம். (தொலைக்காட்சி பார்ப்பவர்கள் தவறாகப் புரிந்துக் கொண்டால், அவர்கள் பன்ச் வசனம் கேட்டே செவிடாக போவார்கள் என்று சபிக்கவில்லை, இருந்தாலும் எச்சரிக்கை). அதாவது, சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் சின்னம், ஆம்பிகிராம் (Ambigram) என்னும் வடிவமைப்பு நுனுக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை, நீங்கள் எந்த கோனத்தில் திருப்பியும் (குப்புர அல்ல), திரும்பியும் (பின் பக்கம் அல்ல) பார்த்தாலும் ஒரே மாதிரி தான் தெரியும், விளங்கும்.
மூன்றாவது இடம்:

நார்த்வெஸ்ட் விமான சேவை நிறுவனத்தின் சின்னத்தை மேலோட்டமாகப் பார்த்தால், W என்ற எழுத்தின் மீதே, N எனும் எழுத்தினையும் காட்ட முயற்ச்சிப்பது போல தெரியும். அதையும் தான் செய்திருக்கிறார்கள். "N"ஐத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு முக்கோன அம்புக்குறி மாதிரி இருக்கும். அது, வரைபடங்களின் முறைப்படி North-West திசையைக் குறிக்கிறது. இதனை வடிவமைக்க மிக நேர்த்தி மற்றும் புத்திக் கூர்மை வேண்டும்.
இரண்டாவது இடம்:

F1 சின்னத்தில் கருப்பு நிற "F" பக்கத்தில் சிகப்பு நிறத்தில் 1 இருப்பது போல தோன்றும். உண்மையில், F மற்றும் சிகப்பு நிற 1 இடயிலான காலி இடமே "1" என்ற எண்ணின் உருவத்தில் இருக்கும். அதாவது, 1 என்ற எண் அதிவேகமாக F மீது மோதுவது போல இருக்கும்.
முதல் இடம்:

SONY VAIO மடிகணினியின் சின்னம் இது. இதன் வடிவமைப்பு பார்ப்பதற்கு கவரும் வகையில் தான் இருக்கும். ஆனால் அது அர்த்தம் வாய்ந்ததாகவும் தான் வடிமைத்துள்ளனர். அதாவது, V A இரண்டும், Analog signal என்பதினை குறிக்கிறது. I O இரண்டும் Digital Signal என்பதினைக் குறிக்கிறது. சோனியின் இன்த சின்னம் தான் நமது ரேட்டிங்கில் முதல் இடம். இதை வடிவமைத்த விதம் பற்றி சொல்லவே தேவையில்லை.
கௌரவ பட்டம்:
உலகிலேயே வெகு சில நிறுவனங்களே தங்கள் சின்னத்தில் தனது பயரைப் பயன்படுத்தாமல் வெறும் சின்னத்தின் வடிவம் மட்டுமே பயன்படுத்திருக்கும். அவைகளில், வசீகரமானதும், அதிகம் பேரைக் கவர்ந்த சின்னம் ஆப்பிள்-ன் சின்னம் ஆகும்.

சந்த்திப்போம்..